தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் நாய்கள் கண்காட்சியில் 30 வகையான நாய்கள் பங்கேற்பு

மதுரை: காந்தி மியூசிய மைதானத்தில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பத்து மாநிலங்களைச் சேர்ந்த 30 வகையான நாய்கள் கலந்துகொண்டன.

madurai
madurai

By

Published : Feb 10, 2020, 9:36 AM IST

மதுரை காந்தி மியூசிய மைதானத்தில் தேசிய அளவிலான 34ஆவது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

கேனைன் கிளப் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பத்து மாநிலங்களிலிருந்து 30 வகையான, மொத்தம் 225 நாய்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

குறிப்பாக நாட்டு நாய்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக நாட்டு நாய்களுக்கென தனி அரங்கில் கண்காட்சி நடத்தப்பட்டது.

இது நாட்டு நாய்கள் வளர்ப்போர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இதில் டூடுல், ஜெயின் பெர்னாட், ஆப்கான் ஹண்ட், ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன், கிரேடேன், ராட் மாஸ்டிஸ், பாக்சர், ஜிவாவா, மால்டிஸ், சைபீரியன் அஸ்கி, ஸ்பேனியல் உள்ளிட்ட 20 வகையான வெளிநாட்டு நாய்களும், தமிழ்நாட்டின் மந்தை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை உள்ளிட்ட 10 வகையான நாட்டு நாய்களும் கண்காட்சியில் கலந்துகொண்டன.

மதுரையில் நாய்கள் கண்காட்சி

இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட நாய்களுக்கு உடல் கட்டமைப்பு , கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இறுதியாக அவற்றில் வெற்றிப்பெற்ற எட்டு நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுக்கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: குன்னூரில் நாய்கள் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details