மதுரை கூடல் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வயதுள்ள தாரா என்னும் புல்லி குட்டான் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். தாரா குடும்பத்தினரிடம் அதிக பாசத்துடன் இருந்து வந்துள்ளது. யாரையும் அவ்வளவு எளிதில் வீட்டில் நுழைய விடாமல் காவல் காப்பதிலும் தாரா படு கில்லாடியாக இருந்து வந்துள்ளது
இதனிடையே நேற்றைய தினம் குடும்பத்தினர் தங்களுடைய வேலையில் மூழ்கி இருந்த சூழ்நிலையில் தாரா வழக்கத்துக்கு மாறாக பயங்கரமான சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. காம்பவுண்டுக்குள் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. இதை பார்த்த குடும்பத்தினர் வெளியே வருவதற்குள் தாரா கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் செட் பகுதிக்குள் சென்றது.
தனது எஜமானரின் குடும்பத்தைக் கார் அருகில் தாரா நெருங்கவிடவில்லை. அருகே சென்று பார்த்தபோது கண்ணாடிவிரியன் பாம்பு ஒன்று சீறிக்கொண்டிருந்தது. தாரா உடனடியாக கட்டுவிரியன் பாம்பை கடித்து குதற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் பாம்பிடம் இருந்து தாராவைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் தாரா இறுதிவரை குடும்பத்தினரை நெருங்கவிடாமல் தொடர்ந்து சண்டையிட்டது. இதில் கட்டுவிரியன் பாம்பு தாராவின் முகத்தில் ஆக்ரோஷமாக கொத்தி விஷத்தை செலுத்தியது. மேலும் தாரா கடித்ததில் பாம்பு அந்த இடத்திலேயே இறந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து சில நிமிடங்களில் தாரா மயக்க நிலைக்கு சென்றது. இதனால் அவசர சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாரா தீவிர காண்காணிப்பில் உள்ளது.
இதையும் படிங்க... நீ வாக்கிங் போகணுமா... ஜாலியா போயிட்டு வா: ட்ரோன் விட்ட நபர்