மதுரை அரசு மருத்துவமனையில் இன்று காலை மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த, பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவ வார்டு பகுதியில் அவரது உறவினர்கள் செருப்பு அணிந்தபடி அனுமதியின்றி நுழைந்துள்ளனர்.
இதற்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஆட்சேபம் தெரிவிக்க, நோயாளியின் உறவினர்கள் அவரை அவதூறாக பேசி மருத்துவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதனால் பெண் மருத்துவர் காயமடைந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் இதனையடுத்து, காவல் துறையினருக்கு அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சம்பவத்தின் போது அலட்சியமாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை!