மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா மன அழுத்தம் காரணமாக நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாணவியின் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் மாணவியின் பெற்றோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது திமுக சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.
பின்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் கூறுகையில், ''மீண்டும் ஒரு துயரமான சம்பவம் நீட் தேர்வினால் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற அடுத்து வரப்போகும் திமுக ஆட்சியில் நீட்டுக்கு உரிய தீர்வை காண வேண்டும் என்று மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி இறுதியாக எழுதிய கடிதத்தில் 'iam sorry, im tried’ என்று மன்னிப்பு கேட்டுள்ளார். உண்மையில் மத்திய, மாநில அரசுகள் மாணவி மற்றும் அவருடைய பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். திமுக தான் நீட் கொண்டு வந்ததாக அதிமுக பொய் சொல்லி வருகிறது. குறிப்பாக முதலமைச்சரின் இரங்கல் செய்தியில் மாணவியின் தற்கொலைக்கு நீட் தான் காரணம் என்று குறிப்பிடாமல் உள்ளது. மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்.
ஜோதிஸ்ரீ மரணம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அடுத்த எட்டு மாதத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. எனவே நாளைய தினம் நடைபெற உள்ள நீட் தேர்வை அச்சமின்றி தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள். கட்டைவிரலை கேட்டால் விரைவில் பட்டை உரியும். நீட் தேர்விற்கு எதிராக திமுக தொடர் போராட்டத்தில் மூலம் வலியுறுத்தி கொண்டே இருக்கும்'' என்றார்.
இதையும் படிங்க:மாணவர்களின் தற்கொலைகளை நீட்தேர்வுடன் தொடர்புபடுத்திக் கூறவேண்டாம் -பொன். ராதாகிருஷ்ணன்