மதுரை விமான நிலையத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதிமுகவினர் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கின்றனர்.