கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், திமுக சார்பில் ’ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் மூலமாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ தளபதி, “மதுரை மாவட்டத்தில் ’ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தில் பயன்பெற 30 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. திமுக சார்பில் 10 ஆயிரம் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 20 ஆயிரம் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும்” என்றார்.