தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு... மதுரையில் போராட்டம்... - திமுகவினர் போராட்டம்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் திமுகவினர் ரயில் என்ஜின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்தைக் கண்டித்து திமுகவினர் ரயில் எஞினில் ஏறி போராட்டம்
பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்தைக் கண்டித்து திமுகவினர் ரயில் எஞினில் ஏறி போராட்டம்

By

Published : Aug 13, 2022, 8:40 PM IST

மதுரை:ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது, சிலர் காலணிகள் வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவத்தைக் கண்டித்து திமுகவினர் ரயில் எஞினில் ஏறி போராட்டம்

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் இஞ்சின் மீது ஏறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

இதையும் படிங்க: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு

ABOUT THE AUTHOR

...view details