மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பா.சரவணனின் தேர்தல் அலுவலகம் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
'அதிமுக வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது' - ஐ.பெரியசாமி - DMK Candidate Saravanan
மதுரை: தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், அதிமுகவினர் வெளியேறவேண்டிய நேரம் வந்துவிட்டது என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதில் ஐ.பெரியசாமி பேசுகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வரப்போகிறார். அதை எப்படித் தடுப்பது என்பதற்கு அதிமுக துடித்துக் கொண்டிருக்கிறது. மே 23ஆம் தேதி மாலை நேரம் முதலமைச்சராக பொறுப்பேற்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்புவிடுப்பார். அதிமுகவினர் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மத்தியில் பாஜக மோடி முகத்தில் கரியைப் பூச இந்திய நாட்டிலுள்ள அத்தனை பேரும் நினைக்கிறார்கள்” என்றார்.