தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் போராட்டமாவது நடத்தினாரா?' - minister sellur raju citizenship amendment bill

மதுரை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக 37 எம்பிக்களைக் கொண்ட ஸ்டாலின் நாடாளுமன்றத்தை முடக்காதது ஏன்? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பியுள்ளார்.

dmk-leader-stalin-why-didnt-protest-for-citizenship-amendment-bill-asks-minister-sellur-raju
minister-sellur-raju

By

Published : Dec 13, 2019, 7:58 PM IST

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரப்பும் பணி நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜு பேசுகையில், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெட் வேகத்தில் அனைத்தையும் செயல்படுத்திவருகிறார். இந்தியாவில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதனால் குடியரசுத் தலைவரிடம் விருதும் வாங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது, தேர்தலை முழுக்க முழுக்க ஆணையம் மட்டுமே நடத்துகிறது. நாங்கள் உதவி மட்டுமே செய்கிறோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகளுக்காக அதிமுக 48 நாள்கள்வரை நாடாளுமன்றத்தையே முடக்கிவுள்ளது. ஆனால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் 37 எம்பிக்களைக் கொண்ட திமுக நாடாளுமன்றத்தை முடக்கியதா? அல்லது அந்த மசோதாவிற்கு எதிராக ஸ்டாலின் போராட்டமாவது நடத்தினாரா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

இதையும் படியுங்க:புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details