தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எம்ஜிஆரை சொல்லித்தான் திமுக அரசியல் செய்ய வேண்டிய நிலை!' - முக ஸ்டாலின்

மதுரை: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை சொல்லித்தான் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்திற்கு உரியது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

dfa
அஃப்

By

Published : Feb 2, 2021, 1:55 PM IST

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்துவைத்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் சிறப்புடன் நடைபெற்றுவருகின்றன. அதேபோன்று மதுரையில் வைகை ஆறு சீரமைப்புச் சாலைகள் மேம்பாடு எனப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இதுபோன்ற பணிகள் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெறவில்லை.

தேர்தல் நெருங்குகின்ற காரணத்தால் எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைத்து தமிழ்நாடு மக்களைக் கவர நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர்களது கட்சிப் பத்திரிகையில், வாங்காத பல்கேரியா கப்பல் குறித்து எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஊழல் நடைபெற்றதாக அவதூறு பரப்புகிறார்கள். எம்ஜிஆரைப் பெரியப்பா என்று அழைக்கும் மு.க. ஸ்டாலின் அவர் கட்சியைவிட்டு வெளியேற்றப்படும்போது அவரது அப்பா கருணாநிதியிடம் ஏன் நியாயம் கேட்காமல்விட்டார். எல்லா கட்சிகளைப் போலவே திமுகவும் எம்ஜிஆரைச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகத்திலுள்ள நடிகர்கள் யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்குதான் இருந்தது. அதனால்தான் அவர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில், எம்ஜிஆர் எனது 40 ஆண்டு கால நண்பர் ஆகையால் எனக்கு வாக்களியுங்கள் அவர் மறுபடியும் உடல் நலம் தேறி வந்தவுடன் ஆட்சியை அவரிடமே ஒப்படைத்துவிடுகிறேன் என்றெல்லாம் தமிழ்நாடு மக்களிடம் கருணாநிதி கெஞ்சினார். இவையெல்லாம் வரலாறு. தந்தையார் செய்ததை தற்போது அவரது மகன் ஸ்டாலின் செய்கிறார்.

பிற மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டமுறை வேறு தமிழ்நாட்டில் உள்ள முறை வேறு. இங்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக ரூபாய் 6,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிற மாநிலங்கள் பொது விநியோகத் திட்ட பொருள்களை விலை வைத்து விநியோகம் செய்கிறார்கள் குறிப்பாக மலைப் பகுதிகளில் சென்று விநியோகம் செய்வதற்கு கூடுதலாக விலை வைக்கிறார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details