தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும் - வைகோ நம்பிக்கை - DMK coalition victory in the by-election Vaiko confirmed

மதுரை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

vaiko

By

Published : Oct 22, 2019, 2:04 AM IST

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் சந்தேகமின்றி திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாங்குநேரியில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எம்.பி. வசந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. எந்தவித பிரச்னைகளிலும் ஈடுபடாத அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், டெங்கு காய்சல் குழந்தைகளின் உயரை பறித்து கொண்டிருக்கிறது. காய்ச்சல் பரவி வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு அறிவித்திருக்கிறது. சென்னையில், ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகளின் உயிர் பறிபோனது மனதை மிகவும் அதிர்ச்சியடையச் செய்கிறது' என்றார்.

இதையும் படிங்க: 'பொய் வழக்குப் போட்டு வெற்றியைத் தடுக்கும் காவல் துறை!' - வசந்தகுமார் குற்றச்சாட்டு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details