மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்.22) எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தன.
இந்நிலையில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 68 வார்டுகளில் திமுக தனித்து 43 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 5, கம்யூனிஸ்ட் 4, மதிமுக 2, விசிக 1 ஆகியவை 12 இடங்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.