தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக அரசு மீது ரபேல் விமான ஊழல் வழக்கு உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ’நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்தான் நீதிமன்றம் தண்டனை வழங்கும்.
விஜயகாந்த் விரைவில் பரப்புரை செய்கிறார்? - பிரேமலதா
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.
மேலும் பேசிய அவர், ”22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். சாதிக் பாட்ஷா மனைவி மீதான தாக்குதல் என்பது கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணம் ஆகும்.
அதேபோல் உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். இவர்கள் அனைவரும் விரைவில் தண்டனை பெறுவது உறுதி. எங்கள் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஆகையால் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும்” என்றார்.