தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்தான பெண் மர்மமான முறையில் கொலை; தந்தை தலைமறைவு! - திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுப் பெண் கொலை

மதுரை: விவாகரத்து பெற்று வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியுள்ள தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை
murder at Madurai

By

Published : Dec 20, 2019, 3:51 AM IST

மதுரை கோரிப்பாளையம், மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருடைய மூத்த மகள் ரிஷ்வானா பானுவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது திருமணம் தொடர்பாக தந்தை, மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வீட்டில் ரிஷ்வானா பானு கழுத்து அறுக்கபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விவாகரத்து பெற்ற பெண் மர்மமான முறையில் கொலை

இந்த சம்பவம் குறித்து தலைமறைவாக உள்ள தந்தை முகமது இஸ்மாயிலை தல்லாகுளம் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மேலும், மகளுடன் ஏற்பட்ட தகறாறின் போது ஆத்திரத்தில் தந்தை மகளை கத்தியால் கொடூரமாகக் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளாரா? அல்லது தனியாக இருந்த பெண்ணை வேறு யாரும் கொலை செய்தனரா என காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணனை கொன்று நாடகம் ஆடிய தம்பி, மைத்துனர் கைது!

ABOUT THE AUTHOR

...view details