தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா பதுக்கி வைத்த இருவருக்கு 12 ஆண்டு சிறை! - கஞ்சா பதுக்கி இருவருக்கு 12 ஆண்டு சிறை

மதுரை: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்த இருவருக்கு 12 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை நீதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madurai district court

By

Published : Nov 19, 2019, 9:08 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வில்சன் கேப்ரியல். 2018ஆம் ஆண்டு இவருக்குச் சொந்தமான வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைகப்பட்ட 466 கிலோ கஞ்சாவை தூத்துக்குடி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், வில்சன் கேப்ரியல், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details