மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எழுத்தராக பணியாற்றி வருபவர் வெள்ளை கண்ணு. பல்கலைக்கழகத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு பணி மூப்பை போலியாக உருவாக்கி பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும், முறையான தகுதியுடன் 35 ஆண்டுகள் பணிபுரிந்த தனக்கு பணிமூப்பு, ஊதிய உயர்வு போன்றவற்றை வழங்க மறுப்பதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இவர் புகார் அளித்திருந்தார்.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா? - Discrimination against dalits allegedly reported in kamaraj university
மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிற பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஊழியர்களுக்கு பணி மூப்பு மற்றும் ஊதிய உயர்வு வழங்க மறுத்ததாக கூறி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்புகாரின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் பதிலளிக்கும்படி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் தரப்பில், "கரோனா பொது முடக்கம் அமலில் இருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக ஊழியர்களுக்கு பணி மூப்பு போன்றவை வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த புகார் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து இருவரின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்படி ஆளுநர் அலுவலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.