சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கீழடியில் தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது நான்கு முதுமக்கள் தாழி, ஐந்து மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் கீழடியில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்பாட்டு பொருள்களான மண் குவளைகள், கலயங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இந்த மூன்று அகழாய்வு களங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், பத்து தொல்லியல் அலுவலர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.