தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரன் சிலை கண்டுபிடிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

மதுரை: 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுகல் வீரன் சிலை கண்டெடுப்பு
நடுகல் வீரன் சிலை கண்டெடுப்பு

By

Published : Feb 5, 2021, 4:09 PM IST

மதுரை மாவட்டம் வண்டியூர் செல்லும் சாலையில் வைகை ஆறு அமைந்துள்ளது. இதன் மண்டபம் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் வீரன் சிலையோடு, 400 ஆண்டுகள் பழமையான திரிசூலமும், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சூலக்கல் ஒன்றையும் சிற்ப ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் கண்டறிந்துள்ளார்.

இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய அவர் கூறுகையில், "பாண்டியநாட்டுப் பகுதியில் இது போன்ற சூலக்கல், பண்டைய காலத்தில் மன்னர்கள் அல்லது அவர்களைச் சார்ந்த குடும்பத்தார் கோயில்களுக்கு நிலங்களை தானமாக எழுதி வைக்கும் போது வைப்பது மரபு. சிவன் கோயில்களுக்கு அவ்வாறு நிலங்களை எழுதி வைக்கும் போது அதன் எல்லையில் இது போன்ற சூழக்கல்லை நட்டு வைத்தனர். அது சார்ந்த விவரங்களையும் எழுத்துகளாக பொறிக்கும் வழக்கம் உண்டு.

நடுகல் வீரன் சிலை கண்டெடுப்பு

இது போன்ற சூலக்கல் மதுரையில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதன் கீழே உள்ள தமிழ் எழுத்துக்கள் தரும் விபரங்களை வல்லுநர்களின் துணை கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பெயர்களில் இதனை வழிபடுகின்றனர். இது போன்ற பழமையான சின்னங்களின் அருகில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே பழமைவாய்ந்த கற்சிலை கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details