கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார். அதில், ”என் நிலத்தின் சர்வே எண்ணின் உள்ள தவறை சரிசெய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
அதற்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்தார். அதாவது, ”வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காததினால் தான் தோனி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை அவரது பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். வருவாய்த் துறையிலிருந்து லஞ்சம் தொடங்குகிறது. வருவாய்த் துறையில் பணிபுரியும் பெரும்பாலான வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், பலர் ஆவணங்களை திருத்தம் செய்கின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவிக்கின்றனர்.