மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள 'தமிழ் சினிமா நடிகர்கள்' சங்க அலுவலகத்தில் வைத்து அதன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'சீமராஜா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தற்போதைய தமிழ் சினிமாவில் மீசை வளர்த்தவர்களுக்கும் காதில் தண்டட்டி அணிந்தவர்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே வரும் காலங்களில் இளைஞர்கள் மீசை வளர்ப்பதுடன் தமிழ் திரைப்பட வாய்ப்புகளையும் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த உறுப்பினர் அடையாள அட்டையை வாங்க வந்தவர்களில் பலர் என்னுடைய படங்களில் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்கள்.
எனது திரைப்படங்களில் நமது மண்ணின் பெருமையை பறைசாற்றக்கூடிய வகையில் காட்சிகள் இருக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர உதவி ஆணையாளர் ஜஸ்டின் பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிங்க: 'சீமராஜா' பொன்ராம் இயக்கும் 'எம்ஜிஆர் மகன்' சசிக்குமார்!