தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான கட்டுரை போட்டியில் திண்டுக்கல் மாணவர் 3ஆம் பரிசு - மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

திண்டுக்கல்லில் உள்ள காய்கறி சந்தையில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் பயிலும் மாணவர், மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2022, 10:14 PM IST

மதுரை:இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அதில் '2047இல் இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்த மதுரை காமராசர் பல்கலைக்கழக திண்டுக்கல் மாலை நேரக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு கணிதம் பயிலும் ஜோதிராம் என்ற மாணவர் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.

அதற்கு 50ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுடன் சான்றிதழையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. மாணவர் ஜோதிராம், திண்டுக்கல்லில் உள்ள காந்தி காய்கறி சந்தையில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

s

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜா.குமார், பதிவாளர் மு.சிவக்குமார், டீன் சதாசிவம் மற்றும் மாலை நேரக் கல்லூரியின் இயக்குநர் தி. மேகராஜன் ஆகியோர் மாணவர் மற்றும் மாணவரின் பெற்றோரை நேரடியாக அழைத்துப் பாராட்டினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details