மதுரை:இந்தியாவில் கரோனா நோய்ப் பரவல் அதிகமானதால் தமிழ்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபடவும் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதன் காரணமாக உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் கலந் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு, திருவிழா கோயில் வளாகத்திலேயே நடைபெற்றுவருகிறது.
விதிமுறைகளைப் பின்பற்றாமல் குவிந்த மக்கள் இந்தத் திருவிழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விரதமிருந்து தண்ணீர் பீய்ச்சுவது, மொட்டை அடிப்பது, திரி சுமப்பது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களைச் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், மதுரை வைகை ஆற்றில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திவருகின்றனர். நேற்றும் இதேபோன்று பொதுமக்கள் மொட்டையடித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் கடந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா ரத்துசெய்யப்பட்டதால் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் தினத்தன்று வைகையாற்றில் ஏராளமானோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அவர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
கரோனா கவலையின்றி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்