தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி - பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மதுரை செய்திகள்

மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலையில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Madurai
Madurai

By

Published : Nov 21, 2020, 6:32 AM IST

முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக வணங்கப்பட்டு வரும் அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் ஒவ்வொரு நாளும் முருகன் திரு உலா நடைபெற்றது. முதல்நாள் அன்ன வாகனத்திலும், இரண்டாம் நாள் காமதேனு வாகனத்திலும் மூன்றாம் நாள் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் முருகப் பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

தற்போதைய கரோனா சூழல் காரணமாக பக்தர்கள் அனைவரையும் வீடுகளிலேயே காப்பு கட்டி விரதம் இருக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மேளதாளம் முழங்க முருக பெருமானின் வேல் எடுத்து வந்து முருகனின் அருகில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்பு முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும், வதம் செய்தார். பின்பு நாவல் மரத்தடியில் நின்று பத்மாசூரனை சம்ஹாரம் செய்தார். சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இன்று திருக்கல்யாண நிகழ்ச்சியில் வள்ளி தெய்வானையை முருக பெருமான் மணமுடிக்கிறார். நேற்றைய சூரசம்ஹார நிகழ்வு கோயிலின் இணையதள பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக உதவி ஆணையர் அனிதா மற்றும் நிர்வாக பணியாளர்கள் செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details