மதுரை: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த சிறப்பு பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெற்கு ரயில்வே தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பரமேஸ்குமார் குப்தா (55), அங்குலி ஹரியா (36), சந்திரமான் சிங்(65) மனோரமா அகர்வால் (81), குமாரி ஹேமானி பேரியல் (22), மிதிலேஷ் குமாரி (62), சாந்தி தேவி வர்மா (57) ஆகிய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேர் யார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்!