தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (நவ.29) மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபமானது மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மேலே ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு வழியாக மலைக்கு மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள், பின்பு மாலையில் மலை மேலிருந்து மகா தீபத்தை காண்பது வழக்கம். இந்தாண்டு, கரோனா தொற்றின் காரணமாக மலைக்கு பின்புறமுள்ள படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.