மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகமாக இருந்தது. அக்டோபரில் 6 பேரும் நவம்பரில் 14 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டிசம்பரில் இந்த பரவல் வேகமானது. அந்த மாதத்தில் மட்டும் 45 பேரை டெங்கு தாக்கியது. கடந்த 20 நாட்களில் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி, மார்ச் மாதம்வரை இந்த பாதிப்பு இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல்: 7 வயது சிறுவன் உயிரிழப்பு - டெங்கு காய்ச்சலால் இறந்த சிறுவன்
மதுரை: டெங்கு காய்ச்சல் காரணமாக மதுரை அருகே 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![டெங்கு காய்ச்சல்: 7 வயது சிறுவன் உயிரிழப்பு dengue fever](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10335144-177-10335144-1611298651663.jpg)
மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்துவருபவர் சத்யபிரியா. இவரின் இரண்டாவது மகன் திருமலேஷ் (7) கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு (ஜனவரி 21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெங்கு பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சத்யபிரியாவின் மூத்த மகன் மிருத்தின் ஜெயன் (9) டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டு, தற்போது மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.