தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை சந்தையில் மலர்கள் விற்பனையில் பெரும் சரிவு! - மதுரை மாவட்டம் மலர் சந்தை

மதுரை: மலர் சந்தையில் தொடர்ந்து பூக்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

விற்பனையில் பெரும் சரிவு
விற்பனையில் பெரும் சரிவு

By

Published : Nov 7, 2020, 2:43 PM IST

மதுரை, மாட்டுத்தாவணி அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம், தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்காக மலர்கள் கொண்டு வரப்படுகின்றன.

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்கள் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. மல்லிகைப் பூ - 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையும், அரளிப் பூ - 30 ரூபாய், பிச்சிப் பூ - 150 ரூபாய், முல்லைப்பூ- 250 ரூபாய், சம்பங்கி - 30 ரூபாய், செவ்வந்தி - 60 ரூபாய், செண்டுப் பூ 30 ரூபாய், துளசி 30 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைப் (நவ.06) போலவே இன்றும் (நவ.07) பிற பூக்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மலர்களின் விற்பனையில் பெரும் சரிவு

தாமரைப் பூ மட்டும் மதுரையிலிருந்து டெல்லிக்கு ஏற்றுமதி ஆவதால் ஒரு பூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வருகிற நாள்களில் மல்லிகைப் பூவின் விலை மேலும் குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தால் துவம்சமான காவல் நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details