மதுரை பைக்காரா மேட்டுத்தெருவில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சாலை மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், "10 ஆண்டுகளில் 1 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்கள் அதிமுக அரசால் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 33 ஆயிரத்து 590 கோடி விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது போல விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டில் திமுக 5 ஆயிரத்து 360 விவசாய கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்தது. திமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவே பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் வரலாற்றில் இல்லாத அளவில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.