மதுரை திருமங்கலத்தில் உள்ள பயணியர் விடுதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவர், தொடர்ந்து தொழிலாளர்களிடம் மனுக்கள் பெறும் முகாமையும் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “பெண் குழந்தைகள் பிறந்தாலே பாவம் சுமை என்று நினைக்கும் அவலத்தைப் போக்கும் விதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த பெண் குழந்தைகளை அரசு வளர்த்து ஆளாக்கும். இந்த திட்டத்திற்காக தான் அன்னை தெரசாவே நேரில் வந்து பாராட்டுகளையும் கூறினார்.
குடியுரிமை சட்டத்தை உருவாக்கிய மத்திய அரசு முழு விளக்கம் அளித்துள்ளது. நாங்கள் தெளிவாக புரிந்திருக்கும் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் அதில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. இதனை திரித்து கூறுபவர்களுக்கு ஏதேனும் உள்நோக்கம் என்பதில்தான் மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. உண்மை செய்திக்கு ஆங்கிலமாக இருந்தாலும் தமிழாக இருந்தாலும் அதன் வடிவம் ஒன்றுதான். அவர் எந்த மொழியில் கேட்டாலும் அந்த மொழியில் சொல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.