மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமசாமி. இவர் தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற உணர்வினால், தனது தள்ளாத வயதிலும் தன் சொந்த பணத்தில் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 5 லட்சம் வழங்கி தான் வசிக்கும் ஹார்விபட்டிக்குப் பெருமை சேர்த்தார்.
இதன் காரணமாக தமிழ் உணர்வாளர்கள் அவரை மாமனிதர் என்று போற்றி பாராட்டி வந்தனர். இந்நிலையில் அவர் தனது இறப்புக்குப் பிறகு தனது உடலை தானம் செய்ய மதுரை அரசு மருத்துவமனையில் பதிவு செய்து வைத்து இருந்தார்.
தமிழ் உணர்வாளர் ராமசாமி மரணம் தொடர்ந்து தன்னந்தனியாக வசித்து வந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது உடலுக்கு ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி மக்கள் நல மையத் தலைவர் அய்யல்ராஜ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்பட தமிழ் உணர்வாளர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் தற்போது ராமசாமி நினைத்தபடி அவர் உடல் தானம் செய்யப்பட, மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளின் உரிமைகளுக்காக விழிப்புணர்வு: குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம்!