மதுரை:புகழ்பெற்ற ஆன்மீக அடையாளமாகத் திகழும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குளத்தை சுத்தப்படுத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். இது தமிழகத்தின் இராண்டாவது தெப்பக்குளம் ஆகும். இதற்கு வைகை ஆற்றில் இருந்து, பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் நிரந்தரமாக நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில், வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீராலும், தொடர் மழையினாலும் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்பொழுது குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கின்றது. இந்நிலையில், தெப்பக்குளத்தில் பாசிப்படர்ந்து தண்ணீர் பச்சை நிறமாக காட்சி அளிப்பதோடு, ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.