தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் காலம் நீட்டிப்பு! - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் காலத்தை ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

By

Published : Jun 26, 2020, 9:38 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு வருகிற 30ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து இந்நான்கு மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முழு ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து, அம்மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் தேதியை ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து, ஏற்கெனவே தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்படாத பிற மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மதுரை, தேனி ஆகிய இரு மாவட்டங்களிலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதியையும் ஜூலை 15 வரை, நீட்டித்து தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க :எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details