தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்: அரசைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு! - madurai police

மதுரை: மேலூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தேவர் சிலையை சேதப்படுத்தி அகற்றிய காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நேற்று (மார்ச். 18) மோதல் ஏற்பட்டது. இதனால், கமுதியில் தேவர் சிலை அருகே கறுப்புக்கொடி கட்டி தமிழ்நாடு அரசையும், காவல் துறையையும் கண்டித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் தேவர் சிலை சேதப்படுத்திய விவகாரம் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு
மதுரையில் தேவர் சிலை சேதப்படுத்திய விவகாரம் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

By

Published : Mar 19, 2021, 6:48 PM IST

மதுரை மாவட்டம், மேலூர் அருகே எம். வெள்ளாளப்பட்டியில் தேவர் சிலை சேதப்படுத்தி, அகற்றியதற்கு வியாழக்கிழமை (மார்ச். 19) கமுதி அருகே கே. வேப்பங்குளத்தில் கறுப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தேவர் சிலையை சேதப்படுத்திய விவகாரம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள எம். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட தேவர் சிலையை சேதப்படுத்தி அகற்றிய காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து சமுதாய அமைப்புகள், சமுதாயத் தலைவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு பிரச்சினைகள் குறித்து தீர்வுகாண பேசி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசையும், காவல் துறையையும் கண்டித்து எதிர்ப்பு

மேலும் இதனைக் கண்டித்து தென் மாவட்டங்களில் கறுப்புக் கொடி கட்டி, பல கிராமங்களில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில், தேவர் சிலை அருகே கறுப்புக்கொடி கட்டி தமிழ்நாடு அரசையும், காவல் துறையையும் கண்டித்து எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details