தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட பெண்- வைரல் வீடியோ - லஞ்சம் கேக்கும் இ-சேவை மையம்

உடனடி வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேக்கும் இ-சேவை மையத்தைச் சேர்ந்த பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

By

Published : Jul 12, 2021, 8:59 AM IST

மதுரை:அரசின் பல்வேறு சேவைகளுக்கு இ-சேவை மையங்களே உறுதுணையாக இருந்து வரும் நிலையில் மதுரையில் உடனடி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக வாடிக்கையாளரிடம் 3 ஆயிரத்து 500 ரூபாய் பேரம் பேசிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் வாங்கிய இ-சேவை மைய அலுவலர்:

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவருக்கு வாரிசு சான்றிதழை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க இ-சேவை மையம் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியிலிருந்த பெண் ஒருவர் உடனடியாக வாரிசு சான்றிதழ் வேண்டுமென்றால் அதற்காக 3 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு சாய் கிருஷ்ணன் தேவையான பணத்தை கொடுத்துள்ளார்.

வாக்குவாதம்:

இருந்தபோதிலும் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் இ-சேவை மைய அலுவலர் கால தாமதம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில் சாய் கிருஷ்ணன் இ-சேவை மைய பெண்ணிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.

வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

அப்போது மேற்கண்ட இரண்டு பேர் இடையேயான வாக்குவாதத்தை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: மிளகாய் விற்பனையில் கமிஷன் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.38 லட்சம் மோசடி; ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details