தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிஆர்பிஎஃப் வீரர் காணாமல் போன வழக்கு- சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு - சிபிஐ

சிஆர்பிஎஃப் படையில் சண்டிகரில் பணிபுரிந்து காணமால் போன அண்ணாதுரை என்பவரை கண்டுபிடிக்க கோரிய வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

crpf-soldier-missing-case-change-to-cbi-mhc-order
சிஆர்பிஎஃப் வீரர் காணாமல் போன வழக்கு- சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

By

Published : Aug 24, 2021, 6:55 PM IST

மதுரை:நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த தெய்வகனி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது கணவர் மகாராஷ்டிராவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்த நிலையில், சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், 2019ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி டெல்லி சென்ற அவர், ஜுலை 1ஆம் தேதி போனிலும், ஜூலை 2ஆம் தேதி வாட்ஸ் அப்பிலும் தன்னிடம் பேசிய நிலையில் அதன்பிறகு எந்த தொடர்பும் இல்லாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 2ஆம் தேதி டெல்லியில் இருந்து எஸ்ஐ பிரோமத் குமார், 'தன்னை செல்போனில் தொடர்புகொண்டு தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளது. ஆனால், கணவர் வரவில்லை' எனத் தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியாததால், தானும், தனது குழந்தையும் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளதாகவும், தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில், சிபிஐக்கு பல முக்கிய வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டது.

நாட்டை காப்பாற்றும் வேலையில் உள்ள சிஆர்பிஎஃப் வீரர் காணமால் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பது முக்கியம் இல்லையா என கேள்வி எழுப்பி, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சி.ஆர்.பி.எஃப். வீரரைக் கண்டுபிடிக்க கோரிய வழக்கு: சிபிஐக்கு நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details