தமிழ்நாடு

tamil nadu

சிஆர்பிஎஃப் வீரர் மாயமான வழக்கு: மத்திய அரசு விரைந்து கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Feb 23, 2022, 10:50 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிய சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி, மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா காவல்துறை உதவியுடன் மத்திய அரசு விரைந்து சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக்கிளை உத்தரவு
மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் பட்டாலியனில் பணியாற்றி வந்த கணவர் பாலமுருகனை கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி முதல் காணவில்லை என அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து தெரிவித்தனர். இது தொடர்பாக அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. ஆகவே, எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு இன்று(பிப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், சிஆர்பிஎஃப் வீரர் உபயோகப்படுத்திய பழைய மொபைல் எண் மாற்றப்பட்டு, அவர் பயன்படுத்திய மொபைலில் புதிய எண் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. மேலும் புதிய மொபைல் எண் மூலம் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா காவல்துறை உதவியுடன் மத்திய அரசு விரைந்து சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சிவகங்கையில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details