தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிப்பு’ - அமைச்சர் கீதா ஜீவன் - சிறுவர்களுக்கும் கவுன்சிலிங்

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது உண்மை, சட்டத்திற்கு முரணாக செயலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறுது. போதை பழக்க வழக்கமும், விற்பனையில் ஈடுபடுவதும் அதிகரித்துவருவதாக மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன - அமைச்சர் கீதா ஜீவன்
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன - அமைச்சர் கீதா ஜீவன்

By

Published : Nov 17, 2022, 10:56 PM IST

மதுரை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி ஒருங்கிணைந்து நடத்தும் 'குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு' தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாணவிகளிடையே பேசியபோது, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது உண்மை, இது ஊடகங்களின் வளர்ச்சியால் கூட இருக்கலாம் கல்வியே அழியாச்செல்வம் அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். விரைவில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறையும் என நம்புகிறோம். தற்போது அதிகமான பாலியல் துன்புறுத்தல்கள் அறிந்த தெரிந்த உறவினர்களாலேயே நடக்கிறது.

நீங்கள் அறிந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றால் தைரியமாக புகார் அளிக்கலாம் ரகசியம் பாதுகாக்கப்படும். பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் போன்றவற்றை தடுக்க 1098 எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். மத்திய அரசு இந்த எண்ணை மாற்ற முயல்வதாக தகவல் வருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த எண் தான் தொடர்ந்து செயல்படும்.

டீன் ஏஜ் பெண்கள் செல்போன்களை கவனமாக பயன்படுத்துங்கள். யாரையும் எளிதாக நம்பாதீர்கள். போக்சோ இழப்பீட்டு தொகையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 2021ஆம் ஆண்டில் மட்டும் 12கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன

முதலமைச்சர் பெண்களுக்கான 40% சதவித வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளார். சட்டத்திற்கு முரணாக செயலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை பழக்க வழக்கமும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பெற்றோர்களுக்கும் சிறுவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். கஞ்சா போதைக்கு உயிரே போகும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றார்.

இதையும் படிங்க: பிள்ளையார்பட்டி கோயில் அறங்காவலரை தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்குத்தடை

ABOUT THE AUTHOR

...view details