மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா நடுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (41). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் (ஜூன் 9) இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது உடலை பட்டியினத்தோருக்கான சுடுகாட்டிற்கு மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாகக் கொண்டுசெல்ல குறிப்பிட்ட பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அத்துடன் அந்தப் பகுதியில் முள் வேலியால் அடைத்து பாதையை மறித்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை உடலைக் கொண்டுசெல்லாமல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.