மதுரை: வெங்காயம், உருளைக்கிழங்கு விலை உயர்வைக் கண்டித்து இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செல்லூர் தாகூர் நகர் பகுதியில், நகைகள் வைக்கும் பெட்டியில் வெங்காயம், உருளைக்கிழங்கை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் சசிகலா, போராட்டம் குறித்து பேசுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நேரத்தில் இதுபோன்ற அத்தியாவசியப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் இலவசமாக வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.