மதுரை பால்பண்ணை அருகே உள்ளது மானகிரி. இப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த பசுமாடு ஒன்று, அருகிலிருந்த வாய்க்காலில் தவறி விழுந்தது. இத்தகவலை அறிந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.
பின்னர் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் போராடி வாய்க்காலில் விழுந்த பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மேலும் துரிதமாகச் செயல்பட்டு பசுவை மீட்ட தீயணைப்புத் துறையிரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
வாய்க்காலில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை! - A cow that fell in the canal
மதுரை: மானகிரி அருகே மேய்ந்துகொண்டிருந்த பசுமாடு தவறி வாய்க்காலில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்குப் போராடிய பசுமாட்டை மீட்டனர்.
பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை