தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தீர்ப்பு வரும் வரை முதல் பரிசை வழங்கக்கூடாது’ - ஆட்சியரிடம் மாடு பிடி வீரர்கள் மனு! - மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறைகேடு குறித்து தீர்ப்பு வரும் வரை முதல் பரிசை வழங்கக்கூடாது எனக் கூறி மாடு பிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Cow catchers petition collector for 'first prize not to be given till verdict'
Cow catchers petition collector for 'first prize not to be given till verdict'

By

Published : Jan 30, 2021, 9:29 AM IST

மதுரையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசை பெற்ற வீரர் ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை பிடித்து 2ஆம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார்.

முதல் சுற்றில் களமிறங்கிய 33ஆவது எண் பனியனை அணிந்திருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் 3 காளைகளை பிடித்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் களத்தை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் அணிந்திருந்த அதே எண் கொண்ட பனியனை முன்பதிவு செய்யாத கண்ணன் என்பவர் அணிந்து, தொடர்ந்து 9 காளைகளை பிடித்து, ஆள்மாறாட்ட முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காணும் வரை முதல் பரிசை வழங்கக்கூடாது எனக்கூறி கருப்பணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொள்ள வந்த பெண்: அனுமதி மறுப்பால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details