மதுரையில் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. ஜூன் மாத இறுதி வாரத்தில் இருந்து குறைய தொடங்கி தற்போது வரை அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை நகராட்சி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.