மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளம் பகுதியில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான அர்ச்சனா, வழக்கமான மகப்பேறு சோதனைகள் மேற்கொள்ள அப்பகுதி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதில் இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அர்ச்சனா, அங்குள்ள கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.