மதுரை:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலி தேவி, மதுரம், குமார், அனுஷியா, விஜய சாந்தி, தங்கராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 9 கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுகவினரே பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிற கட்சியினைச் சேர்ந்தவர்கள் கூறும் நபர்களைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யவேண்டுமென மிரட்டல்கள் வருகின்றன,
கவுன்சிலர்களுக்குத் தேவை பாதுகாப்பு
ஆகவே, அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். அன்னவாசல் காவல் ஆய்வாளர் எங்களைத் தொல்லை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.