தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுமலை பெரிய குளத்தில் மண் அரிப்பு: தடுப்புச்சுவர் கட்ட நீதிமன்றம் உத்தரவு - Soil erosion prevention order

மதுரை: எழுமலை பெரிய குளத்தில் விவசாய நிலங்கள், வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எழுமலை பெரிய குளத்தில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

By

Published : Nov 18, 2019, 10:11 PM IST

மதுரை எழுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.பிரவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'எழுமலையில் ஊருக்கு தெற்கு பகுதியில் பெரியகுளம் அமைந்துள்ளது. கிராமத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் பெரியகுளம் பகுதியில் தான் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மழையின் போது கண்மாய் கரையில் மண் சரிவு ஏற்பட்டு விவசாய நிலங்களிலும், வீடுகளும் பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து கண்மாயில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 800 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்த தடுப்புச்சுவர் விவசாய நிலங்கள், குடியிருக்கும் அமைந்திருக்கும் பகுதியில் கட்டப்படாமல் தனியாக கட்டப்பட்டுள்ளது.

எழுமலை பெரிய குளத்தில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

இப்பகுதி மக்களின் கோரிக்கையை மண் சரிவில் இருந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளைக் காப்பாற்ற தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பதே. இதனால் எழுமலை பெரியகுளக் கரையில் விவசாய நிலங்கள், வீடுகள் அமைந்திருக்கும் பகுதியில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட உத்தரவிட வேண்டும்' இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர். தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், எழுமலை பெரியகுளத்தில் விவசாய நிலம், வீடுகள் அமைந்திருக்கும் இடத்தில் மண் அரிப்பு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சபரிமலை தீர்ப்பை மதித்து நடந்துகொள்ளுங்கள் - மதுரை ஆதீனம் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details