தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்நிலை ஆக்கிரமிப்பு : தமிழ்நாடு அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - waterbodies occupation

மதுரை : நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, இதுவரை சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Court order to submit statement of Tamil Nadu government regarding waterbodies occupation
நீர்நிலை ஆக்கிரமிப்பு : தமிழ்நாடு அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Feb 20, 2020, 11:33 PM IST

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை பாதுகாக்க உத்தரவிட கோரிக்கை விடுத்து மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் தமிழ்நாடு தலைமை செயலர், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலர், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஆற்றல் துறை செயலர் நிசாமுதீன், பதிவுத்துறை செயலர் பாலச்சந்திரன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு : தமிழ்நாடு அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : தாயுள்ளம் கொண்டவர் ஜெயலலிதா பாடகி சுதா ரகுநாதன் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details