ராமநாதபுரம் ஆப்பனூரைச் சேர்ந்த ஆறுமுகவேல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குடிமராமத்து திட்டத்தில் பெரியகண்மாய் தூர்வாரப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்து மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘ராமநாதபுரம் பெரிய கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வார 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரிய கண்மாய் தூர்வாரப்படவில்லை. இருப்பினும் விவசாயிகள் சங்கம் சார்பில் பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டதாக கணக்குக் காட்டி 58 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்புள்ளது.எனவே பெரிய கண்மாய் தூர்வாரியதில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
குடிமராமத்து திட்ட முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு! இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் தூர்வாரப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக மனுதாரர் அனுப்பிய மனுவை ஊழல் தடுப்பு இயக்குனர் விசாரிக்காமல் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியது சரியல்ல. எனவே மனுதாரரின் மனுவை தமிழ்நாடு ஊழல் தடுப்பு இயக்குனர் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் 12 வாரங்களில் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு இயக்குனர் மேல் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக மனுதாரர் முறைகேடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஊழல் தடுப்பு இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வேளாண் மண்டல சட்ட முன்வடிவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!