தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஒன்றியக்குழு தலைவர் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்! - சின்னமனூரைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாந்தியின் மகன் விமலேஸ்வரன்

மதுரை : சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் செயல்பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

court has lifted the ban imposed on the DMK union leader
திமுக ஒன்றியக்குழு தலைவர் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்!

By

Published : Mar 13, 2020, 8:48 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாந்தியின் மகன் விமலேஸ்வரன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்தில் 10 கவுன்சிலர் அதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எனது அம்மா போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார். பின்னர் சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற வில்லை, இதை தொடர்ந்து தேர்தல் இரண்டுமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி சின்னமனூர் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எனது தாயார் கடத்த 3ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து போடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்ச் 4ஆம் தேதி சின்னமனூர் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றபோது.அதில் 6 பேர் தேர்தலில் பங்கேற்று தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.கவை சேர்ந்த சின்னமனூர் ஒன்றிய தலைவர் நிவேதா மற்றும் துணை தலைவர் ஜெயந்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து எனது தாயார் தேர்தலில் பங்கேற்கவில்லை.

எனவே கடந்த மார்ச் 4ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஒன்றிய தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். எனது தாயாரை கண்டுபிடித்து ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க.வை சேர்ந்த சின்னமனூர் ஒன்றிய தலைவர் நிவேதா, துணை தலைவர் ஜெயந்தி செயலாற்ற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் காணாமல் போனதாக கூறப்படும் சாந்தியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காணாமல் போனதாக கூறப்பட்ட சாந்தி நேரில் ஆஜராகி, நான் என் சுய விருப்பத்தின் படி,குரங்கனியில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்றேன். தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என கூறினார்.

திமுக ஒன்றியக்குழு தலைவர் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நீதிமன்றம்!

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு சின்னமனூர் ஒன்றியக்குழு தலைவர் நிவேதா, துணைத்தலைவர் ஜெயந்தி செயல் பட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மேலும் மனுதாரர் விமலேஸ்வரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க :விவசாயத்திற்கு 50 ஆயிரம் புதிய இலவச மின் இணைப்பு - பேரவையில் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details