தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதியமைச்சர் வாகனத்தில் காலணி வீசிய வழக்கு...3 பெண்களுக்கு நீதிமன்ற காவல் - அரசு ராஜாஜி மருத்துவமனை

நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் காலணி வீசிய வழக்கில் பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்ளிட்ட 3 பேதரை ஆகஸ்ட்-31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court custody  Court custody for three women  Case of throwing slipper on Finance Minister car  Finance Minister car issue  throwing slipper on Finance Minister car  three women custody in slipper issue  ptr  ptr car slipper issue  madurai news  madurai latest news  நிதியமைச்சர் வாகனத்தில் செருப்பு வீசிய வழக்கு  செருப்பு வீசிய வழக்கு மூன்று பெண்களுக்கு நீதிமன்ற காவல்  நீதிமன்ற காவல்  பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய வழக்கு  நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்  பாஜக மகளிரணி  10 பேர் கைது  நிபந்தனை ஜாமீன்  அரசு ராஜாஜி மருத்துவமனை  செருப்பு வீசிய வழக்கில் பாஜக மகளிர் அணி
நிதியமைச்சர் வாகனத்தில் செருப்பு வீசிய வழக்கு

By

Published : Aug 17, 2022, 10:48 AM IST

மதுரை: ஆகஸ்ட் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தில் பாஜகவினர் காலணி வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மதுரை அவனியாபுரம் காவல்துறையினர், ஆகஸ்ட் 15 அன்று, பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெய கிருஷ்ணா, கோபிநாத், முகமது யாகூப், முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் உள்பட 7 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று நள்ளிரவில் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கருமாத்தூர் அருகே வாகைகுளம் பகுதியில் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரண்யா மற்றும் தெய்வானை உள்பட 3 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து 3 பேருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட 6ஆவது நீதிமன்ற நீதிபதி சந்தானம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி 3 பேரையும் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 3 பேருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை...

ABOUT THE AUTHOR

...view details