மதுரை: மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர் கோயில் கமிட்டி கிராமம் மற்றும் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாகவும், கோயில் திருவிழாக்களில் தங்களிடம் வரி வசூல் செய்து திருவிழாவில் அனுமதி அளிக்க கோரி திருச்சியை சேர்ந்த தம்பதியினர் மனு அளித்தனர்.
திருச்சி, தொட்டியம் பகுதியைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் , "நான் திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.நான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் ஊரில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலில் உள்ளே என்னையும் எனது கணவரையும் அனுமதிக்க கோயில் கமிட்டி உறுப்பினர்கள் மறுக்கின்றனர். மேலும் கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.
அதனை அடுத்து ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னிடம் வரியை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு தெரிவித்து உள்ளனர். எனவே, திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலில் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னுடைய வரி வசூலை ஏற்றுக் கொள்ளவும், கோயிலில் சாமி தரிசனம் செய்ய என்னையும், எனது கணவரையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் " என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க:செல்போன் பறிப்பு: ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாப பலி!